Tuesday, September 28, 2010
பருப்பு ரசப் பொடி
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு- 1/2 கப்
சிகப்பு மிளகாய் - 1 கப்
தனியா - 2 கப்
சீரகம் - 1/2 கப்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 2 டீ ஸ்பூன்
உருவிய கருவேப்பிலை - 1/2 கப்
செய்முறை:
1.குறிப்பிட்டு உள்ள பொருட்கள் ஓவ்வொன்றையும் தனியே வறுத்து ஓன்றாக சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும் அல்லது சூரிய ஒளியில் காய வைத்து , பிறகு ஓன்றாக பொடிக்கவும் . காற்றுப்புகா டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.
Monday, September 27, 2010
தீடீர் ரசம்
தேவையான பொருட்கள்:
புளி - சிறிய எலுமிச்சை அளவு
நீர் - 5கப்
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு ,வெல்லம் - தேவையான அளவு
நெய்யில் வறுக்கவும்:
துவரம் பருப்பு - டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - (இரண்டாக கிள்ளியது )
மிளகு - டீ ஸ்பூன்
வெந்தயம் - டீ ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
1. புளியை 1/2 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. நன்கு பிழிந்து கரைசல் எடுத்துக் கொண்டு நீர் சேர்த்து 5 கப் தயாரித்துக் கொள்ளவும்.
3. கறிவேப்பிலை,உப்பு ,வெல்லம் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை 1 (அ) 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
4. நெய்யில் நறுமண பொருட்களை வறுத்து பொடித்து ரசத்தில் சேர்த்து ஒருமுறை கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
5. உடனடியாக மூடியால் மூடவும்.சூடாக சாதத்துடன் பரிமாறவும்
Sunday, September 26, 2010
வெள்ளைப் பூசணி கறி
தேவையான பொருட்கள்:
நறுக்கிய வெள்ளைப் பூசணி - 3 கப்
பால் - 1/2 கப்
துருவிய வெல்லம் (அ) சர்க்கரை -3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்,ஜாதிக்காய் -சிறிதளவு
பொட்டுகடலை மாவு - 1டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
துறுவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. வாணலியில் நெய் விட்டுச் சூடாக்கி இளகியதும் ,நறுக்கிய பூசணிக்காய் துண்டுகளைச் சேர்த்து 1(அ )2 நிமிடம் வதக்கவும்.
2.பாலைச் சேர்த்து குறைந்த தீயில் மூடியிட்டு வேக விடவும் .
3. நீர் பதம் முழுமையாக வற்றி காய் வெந்ததும்,துறுவிய வெல்லம் சேர்த்து சுண்டும் வரை வேக விடவும்
4. மற்ற பொடிகளை சேர்த்து இறுதியில் தேங்காய் கலந்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
Saturday, September 25, 2010
வெண்டை க்காய் மிளகாய் கறி
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/2கிலோ
எண்ணெய்-வதக்க
உப்பு -தேவையான அளவு
கரகரப்பாக இடிக்கவும்:
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
செய்முறை:
1.வெண்டைகாயை 1 1/2 அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, வெண்டையைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் .
3. பாதி வெந்தவுடன் அரைத்த கலவையைச் சேர்க்கவும்.வெண்டைக்காயை வண்ணம் மாறும் வரையில் நன்கு வதக்கவும்.
4. உப்பு தூவி நன்றாகக் கலந்து தீயிலிருந்து இறக்கி வைக்கவும்.
Friday, September 24, 2010
பீட்ரூட் கறி
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் -2
சிகப்பு மிளகாய் - 3
எண்ணெய் -தேவையான
உப்பு - தேவையான
சர்க்கரை -சிறிதளவே
கடுகு -1/44டி ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1/44டி ஸ்பூன்
செய்முறை:
1.வெளித் தொலைச் சிவியபின் பீட்ரூடை பெரிய கண் உடைய துறுவியின் உதவியால் துறுவிக் கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி,கடுகு ,உளுத்தம்பருப்பு,கிள்ளிய சிகப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3.ஒரு நிமிடம் வதக்கிய பின் துறுவிய பீட்ரூட் சேர்க்கவும்.
4.சிறிதளவே நீர் ஊ ற்றி மூடிபோட்டு வேக வைக்கவும்
5.தண்ணிர் நன்கு வற்றியதும் மூடியை எடுத்து விட்டு உப்பு ,சர்க்கரை.சேர்த்து கலந்து இறக்கி வைக்கவும் .
Thursday, September 23, 2010
குடைமிளகாய் - உருளைக்கிழங்கு மசாலா கறி
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் -1/4கிலோ
உருளை கிழங்கு - 2 (அ}3
எண்ணெய் -வதக்க
தனியா தூள் - 1 1/2டி ஸ்பூன்
கரம் மசாலா - 1/4டி ஸ்பூன்
பூண்டு மிளகாய் தூள் - 1டி ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் -1/4 டி ஸ்பூன்
செய்முறை:
1.உருளைக் கிழங்கைக் குக்கரில் வேகவைக்கவும்.மேல் தோலை உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. 1அங்குல சதுரத் துண்டுகளாக குடைமிளகையை வெட்டிக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி வதக்கியதும், குடைமிளகையை வதக்கவும்,மிகையான எண்ணெயை எடுத்து விடவும்.
4. தனியா தூள், கரம் மசாலா,மஞ்சள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
5. உருளைக் கிழங்கை சேர்த்து சில நிமிடங்கள் கிளறி விடவும்.
6. கடைசியாக உப்பு, பூண்டு மிளகாய் தூள் சேர்த்து கலந்து கிழே இறக்கவும்.
Thursday, September 16, 2010
இஞ்சி துவையல்
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 3
துறுவிய தேங்காய் - 11/2 டி ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
1 டிஸ்பூன் எண்ணையில் வறுக்கவும்:
சிகப்பு மிளகாய் - 4
கடலை பருப்பு - 2
உளுந்தபருப்பு -1 1/2 டி ஸ்பூன்
செய்முறை:
1. இஞ்சி இன் மேல் தோலை சீவி மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. சிறிதளவு எண்ணெயில் இத் துண்டுகளை வதக்கவும்.
3. ஆறிய பின் மற்ற பொரூட்களுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும்
புதினா பச்சடி
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் -1/2 கப்
புதினா இலை - 1கப்
சிகப்பு மிளகாய் - 7
உப்பு - தேவையான அளவு
புளி - கோலி உருண்டை அளவு
(நீரில் ஊற வைக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு
சிறிய துண்டுகளாக
நறுக்கிய வெங்காயம் - 2டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1.தேங்காய் ,மிளகாய் ,புளி,புதினா,உப்பு ,வெல்லம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2.எண்ணெயில் பொன்நிறமாக வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
3.மேற்சொன்ன அரைத்த கலவையைச் சேர்த்து ,வாசனை வரும் வரை வதக்கவும். ஆறிய பின் பரிமாறவும் .
Sunday, August 8, 2010
What is jaico?
Jaico is a Hindi word, means victory.A.R.Rehaman win ASCAR Award win for Jaico song .Visit: www.secondpen.com. Tamilpen was RoleModel for World Woman. Visit Link : www.secondpen/tamilpen.com
Subscribe to:
Comments (Atom)