Monday, September 27, 2010

தீடீர் ரசம்

தேவையான பொருட்கள்: புளி - சிறிய எலுமிச்சை அளவு நீர் - 5கப் கறிவேப்பிலை- சிறிதளவு உப்பு ,வெல்லம் - தேவையான அளவு நெய்யில் வறுக்கவும்: துவரம் பருப்பு - டேபிள் ஸ்பூன் சிகப்பு மிளகாய் - (இரண்டாக கிள்ளியது ) மிளகு - டீ ஸ்பூன் வெந்தயம் - டீ ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு செய்முறை : 1. புளியை 1/2 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். 2. நன்கு பிழிந்து கரைசல் எடுத்துக் கொண்டு நீர் சேர்த்து 5 கப் தயாரித்துக் கொள்ளவும். 3. கறிவேப்பிலை,உப்பு ,வெல்லம் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை 1 (அ) 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். 4. நெய்யில் நறுமண பொருட்களை வறுத்து பொடித்து ரசத்தில் சேர்த்து ஒருமுறை கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். 5. உடனடியாக மூடியால் மூடவும்.சூடாக சாதத்துடன் பரிமாறவும்

No comments:

Post a Comment