Sunday, September 26, 2010

வெள்ளைப் பூசணி கறி

தேவையான பொருட்கள்: நறுக்கிய வெள்ளைப் பூசணி - 3 கப் பால் - 1/2 கப் துருவிய வெல்லம் (அ) சர்க்கரை -3 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்,ஜாதிக்காய் -சிறிதளவு பொட்டுகடலை மாவு - 1டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் துறுவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : 1. வாணலியில் நெய் விட்டுச் சூடாக்கி இளகியதும் ,நறுக்கிய பூசணிக்காய் துண்டுகளைச் சேர்த்து 1(அ )2 நிமிடம் வதக்கவும். 2.பாலைச் சேர்த்து குறைந்த தீயில் மூடியிட்டு வேக விடவும் . 3. நீர் பதம் முழுமையாக வற்றி காய் வெந்ததும்,துறுவிய வெல்லம் சேர்த்து சுண்டும் வரை வேக விடவும் 4. மற்ற பொடிகளை சேர்த்து இறுதியில் தேங்காய் கலந்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

No comments:

Post a Comment